கிண்ணியா கல்வி வலயத்தின் பாடசாலைகள் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின்  கீழ் பயன் பெற்றன.

(ஹஸ்பர் ஏ.எச்) அனைவருக்கும் சமத்துவமான, தரமான கல்வினை உறுதி செய்யும் தொடர்ச்சியான நிகழ்ச்சித் திட்டத்தினை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா, அதன் தாய் அமைப்பான முஸ்லிம் எய்ட்  UK இன் நிதியுதவியுடன் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய வலயங்களில் ஒன்றான கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு 2021ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுத்து வருகின்றது.
2023-24 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 3ம் கட்ட கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளின் காரணமாக, கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் ஈச்ச நகர் மதீனா வித்தியாலயம்,  கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் நடுஊற்று சக்கரிய்யா வித்தியாலயம், வான்எல புகாரி மகா வித்தியாலயம், பைசல் நகர் அல் இர்பான் கனிஷ்ட வித்தியாலயம், கச்சக்கொடி தீவு அந்-நஜாத் மகா வித்தியாலயம் போன்ற அதி கஸ்ட பிரதேச பின்தங்கிய பாடசாலைகள், தற்காலிக வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகள், விளையாட்டு உபரணங்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான தளபாடங்கள், கட்டட திருத்தப் பணிகள், ஆய்வு கூடத் திருத்தப் பணிகள் போன்ற பயன்பாடுகளைப் பெற்றுக் கொண்டன.
பூர்த்தி செய்யப்பட்ட பணிகளை பாடசாலை நிர்வாகம் மற்றும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள்  2024.05. 2ம் 3ம் திகதிகளில் கிண்ணியா வலக் கல்வி அலுவலக பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ் அவர்களை பிரதம அதிதியாகக் கொண்டு நடைபெற்றன.