மன்னாரில் போதைவஸ்து வியாபாரி கைது.

(வாஸ் கூஞ்ஞ) இரண்டு வருடங்களின் விசாரனைக்குப் பின் மன்னாரில் பிரபல போதை வஸ்து வியாபாரி என சந்தேகிக்கப்டும் ஒருவர் கைது. சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான அவரின் வீடுகள் , கடைத் தொகுதி மற்றும் சொகுசு வாகனம் முடக்கம்.

பொலிஸ் மா அதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சட்டவிரோத சொத்து சேகரிக்கும் தொடர்பாக கொழும்பிலிருந்து மன்னாருக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வந்த குற்ற புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக மன்னாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் சொத்துகளும் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப் பொருட்கள் கடத்துவோர் தொடர்பாகவும் அவர்களிடம் காணப்படும் சொத்துக்கள் தொடர்பாகவும் கடந்த ஓரிரு வருடங்களாக  பொலிஸ் மா அதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த வகையில் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு  போதைப் பொருட்களை கடத்திவரும் போதைப் பொருட்களின் வியாபாரி என சந்தேகிக்கப்பட்ட  தலைமன்னார் பியரைச் சேர்ந்த ஒருவரை (வயது 42) கொழும்பிலிருந்து மன்னாருக்கு வந்து புலணாய்வில் ஈடுபட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக இச்சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் இவரிடம் காணப்படுகின்ற சொத்து விபரங்களையும் திரட்டியுள்ளனர்.

இச்சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு தலைமன்னார் பியரில் இரண்டு வெளிக்கள இயந்திரப் படகுகளை வைத்துக் கொண்டு தொழில் செய்து வந்ததுடன் அரசாங்க திட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு வீட்டிலேயே வசித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் 2019 ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு குறிப்பிட்ட காலப்பகுதியில் இவர் சுமார் ஒன்பது , பத்து கோடிகளுக்கு மேலான சொத்துக்களை சேகரித்து வைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச சொத்துக்கள் தொடர்பாக சந்தேக நபரின்மீது மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் எவ்வாறு தான் சொத்துக்களை சேகரித்ததை சரியான ஆதாரத்துடன் நிரூபிக்க தவறிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இவரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரனையிலிருந்து இவர் போதை பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு முக்கியஸ்தர் எனவும் தெரிய வந்ததாகவும்

இவர் இதன் பணத்தைக் கொண்டு மன்னார் நகரில் சின்னக்கடையில் பெரிய விசாலமான பெரிய வீட்டுடன் ஒரு கடைத் தொகுதியை நிர்மானித்திருப்பதுடன்  சொகுசு வாகம் ஒன்று தன்னுடன் வைத்துள்ளதாகவும்

இவ்வாறு தலைமன்னார் பியரில் நவீன முறையில் ஒரு பெரிய மாடி வீடு அமைத்து வருவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சொத்துக்கள் எல்லாம் சட்டவிரோத முறையில் சேகரிக்கப்பட்டுள்ளது என சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக தற்பொழுது ஏழு நாட்களுக்கு இச் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது கைமாறவோ கூடாது எனவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபதி சமந்த விஜேசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால அவர்களின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் சந்தேக நபரை வியாழக்கிழமை (02) பொலிசார் கைது செய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதுடன் மன்னார் தலைமன்னார் பியர் பகுதில் இருக்கின்ற சந்தேக நபரின் சொத்துக்கள் யார்வும் பார்வையிடப்பட்டது.

தொடர்ந்து இவரை விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் நீதிமன்னற தீர்ப்பு கிடைக்கும் வரை காலத்துக்கு காலம் முடக்கும் உத்தரவு பெறப்ப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் போதை பொருட்களுடன் தொடர்புடைவர்களின் சொத்துக்கள் முடக்கும் செயல்பாடு வட மாகாணத்திலே இதுவே முதல் தடவை என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)