இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மேதினக் கூட்டமானது பெரிய கல்லாறு மற்றும் கோட்டைக் கல்லாறு வட்டாரக் கிளையினரின் ஏற்பாட்டில் பெரிய கல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
மேதின அரங்கு நிகழ்வுகளில் ஆழ்கடல் மீனவர், நன்னீர் மீனவர், விவசாயிகள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொழிலாளிகள் சார்பாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மே தின அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
அதிதிகளின் பேச்சுக்கள், நடன நிகழ்வுகள், கவிதை அரங்கு மற்றும் நாடகம் என்பன இடம்பெற்றதுடன் நிகழ்வு நிறைவடைந்தன.
இந் மே தின நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் குகதாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, முன்நாள் மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை, பிரதேசக் கிளைகள், வட்டாரக் கிளைகளின் அங்கத்தவர்கள், கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.