மண்முனை மேற்கு அதிபர் சங்கத்தினால் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அகிலா கனகசூரியம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.ரகுவரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி இடமாற்றம் செல்லும் ந.குகதாசன், ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகேசபிள்ளை, இடமாற்றம் பெற்றுச்சென்ற அதிபர்கள் ஆகியோர் இதன்போது வாழ்த்துப்பா வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.