தேசிய கணித ஒலிம்பியாட் தெரிவுக்குழுவில் இடம்பிடித்த மாணவர்களை நேரில் சென்று பாராட்டிய பணிப்பாளர்

அண்மையில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் தேசிய மட்டத்திலான போட்டியில் தேசிய மட்டத்திலான தெரிவு குழாமுக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி கந்தசாமி தேனகா, முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் க.கவிக்சனன் ஆகிய மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், கணித பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் க.பரமானந்தம் ஆகியோர் நேரில் சென்று பாராட்டினர்.

இரண்டு வார பயிற்சியின் பின்னர் சர்வதேச அணிக்கான தெரிவுப்போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.