(வாஸ் கூஞ்ஞ) பேசாலை அபிவிருத்திக் குழுவினால் நூல் , குறும்படம் மற்றும் பாடல் வெளியீடு விழா இதன் தலைவரும் அதிபருமான செபஸ்தியாம்பிள்ளை இராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் நடைபெற்றது.
பேசாலையைச் சேர்ந்த இளம்கலைஞர் றிச்மன் லெனின் ஆசாரி அவர்களால் வடக்கு கிழக்கு மண் கடந்துவந்த யுத்தக்காலத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ‘பகலவன்’ என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டதுடன் குறும்படம் மற்றும் பாடல் வெளியீடும் இடம்பெற்றது.
பேசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அதிபருமான செபஸ்தியாம்பிள்ளை இராஜேஸ்வரன் பச்சேக் வெளியீடு செய்யப்பட்ட நூலை நூல் ஆசிரியரின் பெற்றோரிடம் கையளிக்க நூல் ஆசிரியரின் பெற்றோர் மன்னார் ஆயரிடம் ஒப்படைத்து ஆயரால் இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று (27) காலை 10.30 மணியளவில் பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் . , முன்னாள் குருமுதல்வர் அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளார் . முன்னாள் அதிபர் டிலாசால் சபை அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.