மட்டு நகரில் கஜமுத்துக்களுடன் ஒருவர்   கைது.

(கனகராசா சரவணன்)   மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை  திங்கட்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.கருணாரத்தின ஆகியோரின் வழிகாட்டலில்;

கல்முனை அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.பி.ஜி.கே. நிஸங்க. மற்றும் 33354 வீரக்கோன், 13443 பண்டார. 75812 அபேயரத்தின, 90699 நிமேஸ், 94143 பியுமக, 101073 ஷhனக, 19401 குனபால ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவதினமான இன்று மாலை 6.00 மணியளவில்  மட்டு காந்தி பூங்காவில் மாறுவேடத்தில்  கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்து காத்தக் கொண்டிருந்த பொது அங்கு மாறுவேடத்தில் இருந்த விசேட அதிரடிப்படையின் அவரை சுற்றிவழைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுடன் வியாபாரத்துக்காக எடுத்து வந்த சட்ட விரோதமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.