கவிஞர் வை.கஜேந்திரன் அவர்களுக்கு ‘சிறுவர் இலக்கிய விருது’

(வாஸ் கூஞ்ஞ)  வவுனியாவில் நடைபெற்ற ‘இரா உதயணன் இலக்கிய விருது’ விழாவில் மன்னார் கவிஞர் வை.கஜேந்திரன் அவர்களுக்கு ‘சிறுவர் இலக்கிய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமை (28)  நடாத்திய தமிழ் இலக்கியப் பெரு விழாவில் மன்னார் கவிஞர் வை.கஜேந்திரன் அவர்களுக்கு ‘சிறுவர் இலக்கிய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் 2020 ஆம் ஆண்டு எழுதிய ‘வைரமுத்துக்கள்’ என்ற சிறந்த நூலுக்கே ‘சிறுவர் இலக்கிய விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கவிஞர் திரு.வை.கஜேந்திரன் கவிதை , சிறுகதை , சிறுவர் இலக்கியம் என ஏழு நூல்களையும் , எட்டுக் குறும்படங்களையும் வெளியீடு செய்துள்ளார்.

இலக்கியப் பயணத்தில் ஈடுபட்டுவரும் இவர் வடமாகாணத்தின் இளங்கலைஞர் விருதினையும் , மன்னார் மாவட்டம் ‘கலைச் செம்மல்’ விருதுடன் இன்னும் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுவரும் இந்நிலையிலேயே இந்நடப்பு ஆண்டிலும் (2024) ‘சிறுவர் இலக்கிய விருது’ பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.