( வாஸ் கூஞ்ஞ) பதின்மூன்று வருடங்களாக வழங்கப்படாதிருக்கும் பதிற்கடமைகளுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கக்கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புதன்கிழமை (24) பகல் 12 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் அதிகளவான பெண் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஏழாயிரத்து ஐநூறு ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டுமெனவும்
பதின்மூன்று வருடங்களாக வழங்கப்படாதிருக்கும் பதிற்கடமைகளுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கக்கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மேற்படி போராட்டமானது நாடளாவிய ரீதியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி அலுவலர்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)