(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் பிரபலயமாக விளங்கும் பாடசாலைகளில் ஒன்றான நானாட்டான் மன்.டிலாசால் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பழைய மாணவர்களின் உந்துருளிப் பவனி இடம்பெற்றதுடன் இதைத் தொடர்ந்து அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு இவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் அழைத்தச் செல்லப்பட்டனர்.இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக நானாட்டான் பங்குத்தந்தை அருட்பணி. சுரேந்திரன் ரெவ்வல் அடிகளாரும் , கௌரவ விருந்தினர்களாக அருட் சகோதரர் .செல்வதாஸ் , மன்னார் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு .ஞானராஜ் அவர்களும் மற்றும் விசேட விருந்தினர்களாக இப்பாடசாலையில் கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திக்காக பணியாற்றிய ஆறு முன்னை நாள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வுக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இந்நடப்பு வருடம் (2024) 123 வது ஆண்டையும் நினைவு கூறப்பட்டதுடன் இதை முன்னிட்டு பழைய மாணவர்கள் மூத்தோர் வாழும் இல்லத்துக்குச் சென்று மதிய உணவையும் வழங்கியிருந்ததும் ஒரு விஷேட அம்சமாக இருந்தது.
(வாஸ் கூஞ்ஞ)