தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் அனைத்து கிராமங்கள் தோறும் உள்ள மக்களுக்கும் கிடைக்கப்பெறுவதற்கான நடமாடும் சேவை மன்னார் மாவட்டத்தில்; சனி , ஞாயிறு (20,21) ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றன.இதில் முதல்நாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்து கொண்டு உரையாற்றுகையில்
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது ஒரு இலட்சத்து பதினான்கு ஆயிரம் மக்கள் இருக்கின்றார்கள். இதில் 57 ஆயிரம் ஆண்களும் 57 ஆயிரம் பெண்களும் இருக்கின்றார்கள். சிறுவர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் காணப்படுகின்றார்கள். வயோதிபர்கள் மிகவும் குறைந்தளவு காணப்படுகின்றனர்.
இந்த நடமாடும் சேவையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் றிசாட் பதியுதீன் , தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தீபன் இவர்கள் கலந்து கொள்ளாதபோதும் எமது ஜனாதிபதி அவர்களிடம் சென்று இப்பகுதி அபிவிருத்திக்கு நிதி உதவிகோரி நிற்கின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பண்முகப்பட்ட வரவு செலவு திட்டத்தைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் இலங்கைக்கான சர்வதேசத்துக்கு ஒரு நுழைவாயிலாகவும் பிரசித்திப்பெற்ற ஒரு மாவட்டமாகவும் காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் ஒரு பிரசித்த மாவட்டமாக இருப்பதால் இதை நாம் அபிவிருத்தி கொண்ட ஒரு இடமாக மாற்ற வேண்டும்.
இன்றைய நவீன உலகத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளை நாம் ‘வெல்வோம் ஸ்ரீ லங்கா’ என்ற நவீன முறைக்கு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இதன் நோக்கம் கொண்டே நாம் மன்னாருக்கு வருகை தந்துள்ளோம்.
மன்னார் மாவட்டம் இந்தியாவுக்கு மிகவும் அருகாமையில் இருக்கின்றபோதும் அன்று தொட்டு இன்று வரை இன்னும் தரை மார்க்கமாகச் செல்லும் போக்குவருத்து உருவாக்கப்படவில்லை.
இருந்தும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வர்த்தகத் மற்றும் உறவு தொடர்புகள் இருந்தே வருகின்றது. தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் உள்ள இடத்தை இராமர் பாலம் எனவும் இன்னும் சிலர் ஆதாம் இடம் என்று சொல்லுகின்றார்கள்.
இதனால் இந்த மாவட்டம் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் கொண்ட கலாச்சார மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் ஒன்றுபட்டு வாழ்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிக்pன்றது.
ஏனைய நாடுகள் மாவட்டங்களை நாம் நோக்காது இந்த மாவட்டத்தில் பண்டைக்கால மக்களின் செயல்பாடுகள் இங்கிருக்கும் வளங்களை கொண்டு நாம் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கிச் செல்ல வேண்டும்.
பண்டை காலத்தில் எமது நாடு , மன்னார் மாவட்டம் சர்வதேச வியாபரத்தில் துறை முகங்களைக் கொண்டு செயல்பட்ட சரித்திரம் உண்டு. அப்பொழுதெல்லாம் நாம் எவரிடமும் அலோசனைகள் பெறவில்லை.
இங்குள்ள அரசியல் வாதிகளின் செயல்பாட்டால் இப்பகுதி அபிவிருத்தி காணப்படாத நிலையும் இங்கு காணப்படுகின்றது.
இன்றைய ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றார். இங்குள்ள இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுவதற்கும் அவரின் செயல்பாடு நடைபெற்று வருகின்றது.
சர்வதேச நாட்டுக்கு ஒரு மையம் கொண்ட இடமாக மன்னார் மாவட்டம் திகழ இருக்கின்றது. இதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றது.
இதனால் உல்லாசப் பயணிகளை கவரும் ஒரு இடமாகவும் மன்னார் மாவட்டம் உருவாக இருக்கின்றது என இவ்வாறு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)