மட்டக்களப்பில்  இலவச அரிசி விநியோகம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாலேந்திரன்  கலந்து சிறப்பித்தார்.

நாடு புராகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக  ஆரம்ப விநியோகம்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி போதிகள்  கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலத்தில்  (21) திகதி வழங்கப்பட்டது.600 மில்லியன் நிதி ஒதுக்கீடு மூலம் குறைந்த வருமானம் பெறும் 156000 குடும்பங்களுக்கு இரு தடவை அரிசி போதிகள் வழங்கப்படவுள்ளது.

புது வருட காலப்பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அரிசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷிஸ்ரீகாந், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதி திட்டமிடம் பணிப்பாளர், வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர்  ரோஷ்மன் என பலர் கலந்து கொண்டனர்.