ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளின் ஏற்பாட்டில் விளையாட்டு விழா.

(வி.சுகிர்தகுமார்)   சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிருபத்திற்கு அமைவாக ஆலையடிவேம்பு வடக்கு மற்றும் தெற்கு சமுர்த்தி வங்கிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா இவ்வருடமும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் விளையாட்டு விழா அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலய உள்ள விளையாட்டு மைதானத்திலும் ஆலையடிவேம்பு தெற்கு வங்கியின் விளையாட்டு விழா பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்திலும் நேற்று பிற்பகல் இடம்பெற்றன.
சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.சுரேஸ்காந் மற்றும் கே.கவிதா ஆகியோரின் தலைமைகளில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் அன்னை சாரதா பாடசாலை அதிபர் கோமளம் துளசிநாதன் இலங்கை வங்கி முகாமையாளர் பிரபாகரன் உள்ளிட்ட வங்கி கட்டுப்பாட்டு சபை நிருவாகத்தினர் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாரம்பரிய கலாசார போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்கு பற்றியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

DSC05479.JPGDSC05469.JPGDSC05419.JPG