பிரதேச செயலாளர் பிரிவில் இலவச அரிசி விநியோகம்.

(வி.சுகிர்தகுமார்) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான உணவு பாதுகாப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் மகளிர் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இலவச அரிசி விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் அரிசி விநியோகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாவட்ட அரச உயர் அரிகாரிகள் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 7302 குடும்பங்கள் இலவச அரிசி பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தொடர்ச்சியாக வரும் நாட்களில் பிரிவுகள் ரீதியாக இலவச அரிசி விநியோகம் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.