வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரனின் இடமாற்றத்தினை இரத்துச் செய்ய கோரி பழுகாமத்தில் ஆர்ப்பாட்டம்.(Video)

பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தினை இரத்துச் செய்து மீண்டும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு பணிப்பாளராக நியமிக்கக் கோரி பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பணிப்பாளரின் இடமாற்றத்தில் அரசியல் வாதிகளின் தலையீடு காணப்படுவதாகவும் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கின்ற போது கல்வியினை அபிவிருத்தி செய்ய முடியாது,நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பல கோசங்களை எழுப்பியவாறு தமது கண்டன ரீதியான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.