(ஹஸ்பர் ஏ.எச்)கணபதிப்பிள்ளை அன்ணை பூபதி அம்மா அவர்களது 36-வது நினைவு நாள் 2024/04/19 ஆம் நாளாகிய இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்டத்தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.மட்டக்களப்பு நகரின் மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் முன்பாக மார்ச் 19. 1988 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்1988 ஏப்ரல் 19ல் உயிர் திறந்தார்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.