பௌத்தம் எனக் கூறி  ஏனைய மதங்களை அவமதிக்கும் குழு.

பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாட்டின் குடிமக்களையும், அவர்களின் மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவினர் தற்போது நாட்டில் உருவாகி வருகின்றனர். போதி மரம் பயனற்ற மரம் என ஒரு குறிப்பிட்ட குழுவினர் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு புத்தசாசனம், பௌத்த மதம், மகா சங்கரத்தினர் மற்றும் கௌத்தம புத்தரை அவமதிக்கும் குழுவொன்று நாட்டில் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர்களைப் பொறுத்தவரை, விகாரைகளுக்கு உதவிகள் செய்வதும், சிலைகளை வழிபடுவதும் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி வருகின்றனர், இது தவறா என்று மக்களிடம் கேள்வி எழுப்புகிறேன், அவர்களின் கருத்துப்படி, இன்றும் தான் ஒரு பெரிய தவறையே செய்து வருகிறேன், இந்நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டில் மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்க எந்த உரிமையும் இல்லை. மத சுதந்திரம் அடிப்படை உரிமையாகும். 220 இலட்சம் மக்களுக்கும் தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

மதத்தை தடை செய்து, மத உரிமைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை. புத்தருக்கு புத்தர் நிலையை வழங்கிய போதிமரம் வெறும் போதிமரம் என்று சொல்பவர்களுக்கு, மதச்சார்பற்றவர்கள் என கூறிக் கொண்டு, பௌத்தத்தை இழிவுபடுத்த எந்த உரிமையும்  இல்லை. அவர்களின் மதச்சார்பற்ற கொள்கைகள் ஏனைய குடிமக்களை பாதிக்காத வகையில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால்  முன்னெடுக்கப்படும் ‘சசுனட அருண’ வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம கொஹொமபகஹபெலெஸ்ஸ ஸ்ரீ சுபோதாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் சங்கவாச கட்டிட நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தேவையான, 750,000 ரூபா பெறுமதியான சீமெந்து மற்றும் அஸ்பெஸ்டஸ் உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில்(17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 535,187 ரூபா மதிப்பிலான 99 அஸ்பெஸ்டஸ்களும், 220,000 ரூபா மதிப்புள்ள 100 சிமெந்து மூடைகளும் இதன் போது அன்பளிப்புச் செய்யப்பட்டன.

🟩எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை மக்களுக்கு உண்டு.

மக்கள் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் முழு உரிமையை ஐக்கிய மக்கள் சக்தி பாதுகாக்கும். தான் ஒரு பௌத்தராக, விகாரைகளுக்கும் ஏனைய மத ஸ்தலங்களுக்கும் உதவி செய்யும் சுதந்திரம் தமக்குள்ளதாகவும், இந்த சுதந்திரத்தில் தலையிடவோ, அவமதிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

🟩 மதத்தை மனதில் வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

உண்மையான பௌத்தராகிய நான் இன, மத பேதமின்றி அனைவருடனும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றேன். இந்த ஒற்றுமை, நல்லிணக்கம், நட்புறவு என்பன நாட்டின் பலமாகும், மதத்தையும் இனத்தையும் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவது நாட்டின் தலைமைத்துவம் அல்ல, அவற்றைப் பாதுகாப்பதே உண்மையான தலைவரின் அடையாளம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பௌத்த மதத்தையோ, சம்புத்த சாசனத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ இழிவுபடுத்துவது, மத சுதந்திரத்தில் தலையிடுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்து நாட்டின் மத ஸ்தலங்களுக்கு பல பணிகளை தான் செய்திருந்தாலும், நாட்டுக்கு நல்ல பௌத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் நினைத்து 2019 இல் போலி பௌத்த தலைவர் ஒருவரை நியமித்தனர். அவர் வெற்றி பெற்றதும், உடனே அமுலுக்கு வரும் வகையில் கலாசார அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டங்கள் மற்றும் சிசு தஹம் செவன வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் ஞாயிறு போதனா பாடசாலை மண்டப நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன. தான் நாட்டில் இதுவரை 13 சைதிகளை நிர்மாணித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஸ்ரீ சுபோதாராம விகாரைக்காக, 2013 இல் மட்டும் ரூபா.230000 மதிப்புள்ள சிமெந்து, அதே ஆண்டில் ரூபா.250,000 மதிப்புள்ள நிதி உதவி, ரூபா.51000 உருக்கு கம்பி, மீண்டும் ரூபா. 186,000 மதிப்புள்ள சிமெந்து, 5 இலட்சம் ரூபா நிதி உதவி, மேலும் 25 இலட்சம் ரூபா நிதி உதவி, மற்றும் 40 இலட்சம் பெறுமதியான இரண்டு கட்டிடங்களையும் தான் நன்கொடையாக வழங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

அவ்வாறே, விகாரை திறப்பு விழாவின் போது, ​​5 இலட்சம் ரூபா நிதியுதவி, சமுர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் ஞாயிறு போதனா பாடசாலைக்கு 100000 ரூபா நன்கொடை, 10 இலட்சம் ரூபா மதிப்பில் பாலர் பாடசாலை கட்டிடம், அத்துடன் லிட்ரோ கேஸ் நிறுவனத்திடம் இருந்து சிலிண்டர் கட்டமைப்பைப் பெற்றுக் கொள்ளல், கலாசார அமைச்சர் என்ற முறையில் 80 இலட்சம் ரூபாவும் இந்த  சங்கவாச கட்டிடத்திற்காக வழங்கி வைத்ததாகவும், இதற்கு மேலதிகமாக ஞாயிறு போதனா பாடசாலை மாணவர்களுக்காக 3 மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.