மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகம் ரீதியாக இதுவரை காலமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் சம்பந்தமாக அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளீதரன் அவர்களுக்கு பாராளுமனற் உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் 18.04.2024 சிறப்பு கூட்டம் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பு கச்சேரியில் கூட்டப்பட்டிருந்தது அதன் பிரகாரம் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போது பாராளமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அராயப்பட்டு அதற்கான தீர்வு திட்டங்களும் முன்மொழியப்பட்டது. கீழே குறிப்பிட்ட பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை இரா.சாணக்கியன் முன்மொழிந்த போதிலும் இன்னும் பல பிரச்சனைகள் மற்றும் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்பன முன்மொழியப் படாமல் உள்ளது எதிர்வரும் காலங்களில் அவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னால் முன்மொழியப்பட்ட பிரதேச செயலக மட்டங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் – 2024