மட்டக்களப்பு இகிமிசன் இல்ல சிறார்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு

(வி.ரி. சகாதேவராஜா)
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில்  உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கி வைத்தார்.
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் அப்பிரதேச இராணுவ அதிகாரியால் புத்தாண்டு பொதிகள் சிறுவர் சிறுமியர்க்கு வழங்கப்பட்டது.
 நாட்டில் உள்ள 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் வாழும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு இந்த புத்தாண்டு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
” சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு புத்தாண்டு ” எனும் தொனிப்பொருளில் இது நேற்று வழங்கப்பட்டது.
இராணுவ பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திரசில்வாவின் வழிகாட்டலில் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயின் ஏற்பாட்டில் சமகாலத்தில் அனைத்து இல்ல சிறார்களுக்கும் இந்த புத்தாண்டு பரிசு வழங்கப்பட்டது.
 இனிப்புகள் பரிசு பொருள்கள் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.