கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம்.

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலைய பகுதியில் விவசாய போதனாசிரியர் என். பார்த்தீபன் தலைமையில்  வயல்விழா  நேற்று முன்தினம் நடைபெற்றது.

பரசூட் முறையிலான நெற்செய்கையின் நன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பரசூட் முறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்பன முறையான செய்து காட்டல்கள் மூலம் விவசாய போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவி விவசாய பணிப்பாளர்களான திருமதி நித்தியா நவரூபன், எஸ்.சித்திரவேல் பாடவிதான உத்தியோகத்தர்களான திருமதி லாவண்யா செந்தீபன், லக்ஸ்மன், மாறன் ஆகியோருடன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 இதன்போது ஏற்கனவே பரசூட் தட்டுக்களில் இடப்பட்ட நாற்றுகள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பரசூட் முறையிலான நெற்செய்கையின் போது எமது செலவினை குறைத்து அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 8-12 Kg விதைநெல் போதுமானது என்பதால் மிகக்குறைந்த செலவே ஏற்படும் எனவே விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டுவதற்கு விவசாய திணௌக்களத்துடன் சேர்ந்து முயற்சிக்க வேண்டும் என பிரதி விவசாய பணிப்பாளரும் தன்னுடைய உரையில் கேட்டுக்கொண்டார்.