களுவாஞ்சிகுடியில் ஆர்பாட்டம்.(Video)

(எருவில் துசி) மட் பட் தேசிய பாடசாலையின் முன்பாக மட் பட்டிருப்பு வலயக் கல்வி சமூகம் ஒன்றிணைந்து களுவாஞ்சிகுடி வலய கல்விப் பணிப்பாளரை இடமாற்றக் கோரி ஆர்பாட்டம்(09) ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.

மட் பட்டிருப்பு மாகாவித்தியாலய தேசிய பாடசாலையில் கடந்த சில தினங்களாக ஆசிரியர்களினால் ஆர்பாட்டங்கள் கல்வி பணிப்பாளரை இடமாற்றக் கோரி இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்வி பணிப்பாளரை இடமாற்றக் கோரி ஆர்பாட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.