உலகில் மன்னார் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்க குழுவிடம் மன்னார் பிரஜைகள் குழு எடுத்துரைப்பு.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் தீவில் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது மட்டுமல்ல இவ்வாழ் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் அபாயமும் தோன்றியுள்ளது. இதனால் தற்பொழுது மன்னார் தீவு உலகம் பூராகவும் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது என மன்னார் பிரஜைகள் குழு அமெரிக்க சூழவியல் குழுவிடம் எடுத்துரைத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து மன்னாருக்கு வருகை தந்திருந்த அமெரிக்க சூழவியல் குழு ஒன்று பொருளாதார சூழவியல் அதிகாரி கிறிஸ்தோபர் கூச் தலைமையில் மன்னாhருக்கு வருகை தந்திருந்த வேளையில் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரை சந்தித்தது.

திங்கள் கிழமை (08) மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் மாலை 3.30 மணியளவில் ஆரம்பித்த இரு தரப்பினருக்குமான கலந்துரையாடல் ஒரு மணித்தியாலயத்துக்கு  மேலாக இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின்போது இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் மன்னார் தீவில் முன்னெடுக்கும் காற்றாலை மற்றும் கனியவள மணல் அகழ்வினால் மன்னார் மக்களின் வாழ்வாதாரம் முற்றாக அழியும் அபாயம் தோன்றியுள்ளது.

அத்துடன் இங்கு வாழும் மக்களின் இருப்பிடமும் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதுடன் மன்னார் தீவும் விரைவில் கடலுக்கு இரையாகும் நிலையும் தோன்றியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மன்னாரையும் முல்லைத்தீவையும் ஓதுக்கப்பட்ட மாவட்டங்களாகவே அரசு ஒதுக்கி வைக்கும் நிலையில் இருந்து வருகின்றது.

மன்னாருக்கு அபிவிருத்தி என்ற திட்டங்களை அரசு முன்னெடுக்கும் ஒவ்வொன்றும் அவைகள் மன்னார் மக்களுக்கு பாதிப்புக்களை உண்டு பண்ணும் திட்டங்களாகவே காணப்படுகின்றது.

இலங்கையில் நாட்டில் இல்லாத அளவுக்கு மன்னாரிலிருந்து மதவாச்சி வரைக்கும் நான்கு இடங்களில் இராணுவ பரிசோதனை சாவடிகள் காணப்படுகின்றது.

இதனால் இங்கு பொருட்களை பரிசோதிப்பதற்காக எற்றி இறக்கும் நிலை தொடர்வதால் பொருட்களின் விலைகளும் ஏனைய இடங்களைவிட அதிகமாகக் காணப்படுகின்றது.

மன்னார் மக்களின் குடியிருந்த , குடியிருக்கின்ற காணிகளையும் , வயல்களையும் வன இலாக , பறவைகள் சணராலயம் , பாதுகாப்பினரின் முகாம் என கையகப்படுத்தி வைத்திருப்பதால் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பல சவால்களை பிரஜைகள் குழுவானது தங்களை சந்தித்த அமெரிக்க உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து வருகை தந்திருந்த குழுவிடம் விரிவாக எத்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்து.

(வாஸ் கூஞ்ஞ)