(வி.ரி.சகாதேவராஜா) காரைதீவிலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்”ஒஸ்கார் “(Auskar ) ஒரு தொகுதி பாதணிகளை வழங்கிவைத்தது.
காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயம், விஷ்ணு வித்தியாலயம் மற்றும் கண்ணகி இந்து வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் இன்று ( 8) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த சின்னத்தம்பி கருணாநிதி, வேலுப்பிள்ளை உதயகுமார் ஆகியோர் இதற்கான நிதி அனுசரணையை வழங்கியிருந்தனர்.
ஒஸ்கார் சார்பில் ஆசிரியர்களான கே.லோகநாதன் , இ.இரத்தினகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
குறித்த பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் இவ்வுதவியை நல்கிய ஒஸ்கார் அமைப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் சஜானந்த் உள்ளிட்ட சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.