தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும். தம்பி முத்து.

(ஹஸ்பர் ஏ.எச்)  திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு  (07)திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த மாநாடானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தலைமையில் இடம்பெற்றது.
புதிய தலைவராக அருன்மொழிவர்மன் தம்பிமுத்து மாநில மாநாட்டில் உறுதி செய்யப்பட்டார். செயலாளர் நாயகமாக வீ. ஆனந்தசங்கரி  கட்சியின் புதிய மத்திய குழுவும் மாநாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய அ. தம்பி முத்து தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் அப்போது தான் தமிழ் மக்களுடைய ஆணை அதிகாரங்களை பாதுகாக்க முடியும் தமிழ் பிரதிநிதிகள் தலைவர்கள் அரசியலில் ஒன்று பட்டு பயணிக்க வேண்டும் என்பதையே தமிழர் விடுதலை கூட்டணி விரும்புகின்றது என்றார் .