திகிலி வெட்டை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மனின் புகழ் கூறும் பாடல்கள்.

க.ருத்திரன்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலி வெட்டை  சந்திவெளியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவருள் மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் அன்னையின் புகழ் கூறும் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து
பாரம்பரிய கலாச்சார நடனத்துடன்  வரவேற்கப்ட்டனர்.
ஆலயத்தில் விசேட பூசை நடைபெற்று  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச. டிலேந்திரராஜாவின் இறை ஆசியுடன் அன்னையின் புகழ் பாடும் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு  வெளியிட்டும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெளியிட்டு வைத்தார்.
அவருடன்  கிரான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்,ப.சிவராம்,தொழிலதிபர் ஆ.முவேஸ்வரன் ஆகியோர்களும் உற்சவ கால குரு கி.கிருபைரெத்தினம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கா.நடராசா  ஆகியோர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
குறித்த இறுவெட்டில் பிரதேசத்தின்  மண் வாசனை கமலும் கலாச்சார பண்பாட்டு,விழுமியங்களை பிரதி பலித்துக் காட்டும் வகையிலான கும்மி பாடல்,அம்மன் காவியம்,காவடிப்பாட்டு என்பன அடங்கியுள்ளது.
இப் பாடல்களை ஆலய ஆதின தர்மகர்த்தா சிவஸ்ரீ மகேந்திரன் குருக்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.
நீண்டகாலமாக இவ்வாறானதொரு வரலாற்று ஆவணம் அடங்கிய இறுவெட்டினை வெளியிடுவது தொடர்பாக ஆலய நிர்வாகம் பலவேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதேவேளை மேற்படி நிகழ்வில் ஆலயத்திற்கான ஊடகத்துறை அலுவலகமும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்