இராஜாங்க அமைச்சரின் ஈஸ்டர் படுகொலை நூல் திருகோணமலையில் அறிமுக விழா…!

( ஹஸ்பர்  ஏ.எச்)
இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுறை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை நூல் அறிமுக விழா நேற்று  சனிக்கிழமை (06)காலை 9.30 மணிக்கு ஆசிரியர் கு.  நளினகாந்தன் தலைமையில் திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது..

 நிகழ்வின் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் இ . நெடுஞ்சேழியன் கலந்து சிறப்பித்தார் நூலின் முதல் பிரதியை திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத்தலைவர் துசியந்தன்  முதன்மை அதிதிக்கு வழங்கி வெளியீட்டு வைத்தார்.
நூலின் நயவுரையை நிலாவெளியூர் கெஜதர்மா வழங்கினார்.
நிகழ்வில் அரச உயர்அதிகாரிகள்,  எமுத்தாளர்கள்,  கவிஞர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.