திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச் )திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன மத நல்லுணர்வை மேம்படுத்தும் நோக்கிலேயே இஸ்லாமிய மக்களால் கடைப்பிடிக்கும் இப்தார் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கதாகும்.
நோன்பின் விஞ்ஞான ரீதியான விளக்கம், நோன்பின் மகத்துவம் மற்றும்  சிறப்புத்தன்மை பற்றி  இதன்போது எடுத்து கூறப்பட்டது. மேலும் பாடல் மற்றும் நடன நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், சர்வமதத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

FB_IMG_1712160923189.jpgFB_IMG_1712160945778.jpgFB_IMG_1712160930452.jpgFB_IMG_1712160934972.jpgFB_IMG_1712160940161.jpg