(வி.ரி.சகாதேவராஜா)அரச ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த ஒன்று கூடலின்போது
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அரச சேவை ஓய்வுதியர்களின் நம்பிக்கை நிதியம் சங்கத்தின் காரைதீவு தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் கிராம சேவையாளரும், காரைதீவு சிவன் ஆலயத்தின் தலைவருமான ரி. செல்லத்துரை தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தலைவர் உரையாற்றுகையில்..
12 சர்வதேச பல்கலைக்கழகங்களும் உலகத்தமிழ் பல்கலைக்கழகம் இணைந்து இவருக்கான கலாநிதி பட்டம் வழங்கியமை எமது பிரதேசத்துக்கு மாத்திரமல்ல அனைத்து தமிழ் மக்களினுடைய சந்தோசமாகும் அதற்காகவே கலாநிதி ஜெயசிறில்அவர்களுக்கு இந்த நிகழ்விலே பொன்னாடை போர்த்தி கௌரவிக்கின்றோம் என்றார்.
இளம் வயதிலிருந்தே அவர் பல்வேறுபட்ட சமூக சமய செயல்பாடுகளையும் செய்து வருகின்ற விடயம் அனைவருக்கும் தெரியும் அதன் அங்கீகாரமாகவே கலாநிதி பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது பொருத்தமானவருக்கான இந்த பட்டம் வழங்கப்பட்டிருப்பது எமது அங்கத்தவர்களிடையே மிகவும் மகிழ்வையும் சந்தோஷத்தையும் தருகிறது எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் காரைதீவு ஹட்டன் நேஷனல் வங்கியின் முகாமையாளர் எஸ்.ஜெயபாலன் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார், பிரதேச செயலகத்தின் AO, ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் தர்மகத்தா ஓய்வூதிய சங்கத்தினுடைய செயலாளர் ரி.கோணேஸ்வரன். மற்றும் ,பொருளாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் கலாநிதி ஜெயசிறில் உரையாற்றுகையில்.. இங்கு முன்னுள்ளவர்கள் மிகவும் சமூக சேவை செய்தவர்கள் அரச ஊதியம் பெற்று இன்று பல சமூக செயல்பாடுகளிலே ஈடுபடுகின்றீர்கள். உங்களுடைய காலத்தில் இருந்த ஒழுக்க விழுமியங்கள் இப்போது இல்லாமல் இருக்கின்றது போதை பொருட்களுக்கு இளைஞர்கள் இலக்காகின்றார்கள் எமது இனத்தின் விடிவுக்காக எமது இனத்தின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக உங்களுடைய அர்பணிப்பான செயற்பாட்டை நீங்கள் செய்து கொண்டு வருகின்றீர்கள் தொடர்ச்சியாக இந்த போதை பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டு எடுத்து எமது தமிழினத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய உங்களுடைய தொடர்ச்சியான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும் அத்தோடு உங்களுடைய சமூக சேவைகளை இளவயதில் பார்த்து நானும் செய்து இருந்தேன் அதன் அடிப்படையிலேயே இது எனக்கான பட்டமல்ல இது சமூக சேவை செய்கின்ற அனைவருக்கும் மான ஒரு அங்கீகாரம் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன் சேவை எந்த பலனும் இல்லாமலே நாங்கள் செய்து வருகின்றோம் ஆனால் இது அங்கீகாரம் என்பது சமூக சேவையாளருக்கானதாகவே நான் சிந்திக்கின்றேன். என்றார் .