சமுக சிற்பி வி.எஸ் துரைராஜா அவர்களின் நுால் அறிமுக விழா.

(அஷ்ரப்  ஏ சமத்)  கொழும்பு கலை, இலக்கிய .ஊடக நண்பர்கள் வட்டம்  சமூக சிற்பி வி.எஸ்.துரைராஜா தலைவர் தமிழ்க்கல்லுாரி கனடா அவர்களின் ஒரு சமூக சிற்பியின் பட்டறிவு பகிர்வு நுால் அறிமுக விழா செவ்வாய்க்கிழமை 02.04.2024 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வு மருத்துவர் சாகித்ய ரத்னா தி.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் , நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசீம் உமர் அவர்கள் நுாலசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இவ் விழாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி .ஆனந்தசங்கரி, முனைவர் சதீஷ்குமார், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர், சிரேஷ்ட சட்டத்தரணி  சுகந்தி இராஜகுலேந்திரா, ஆரோக்கியம் பிரான்சிஸ், த. அரியரத்தினம், லீலாவதி மோகனசுந்தரம், கே. பொன்னுத்துரை, உமாசந்திரா பிரகாஷ், கலாநிதி,சிவஸ்ரீ ்இராமசந்திர குருக்கள் பாபு சர்மா ஆகியோர்கள் ஆசியுரை, நூல் நயவுரைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.