(பாறுக் ஷிஹான்) லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 4500 ரூபாவிற்கு வர்த்தகர்கள் தான்தோன்றித்தனமாக நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.
அத்துடன் மாவட்டத்தில் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை வர்த்தகர்கள் நுகர்வோரிடம் இருந்து பெற்றுக்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த செயற்பாட்டை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் பின்வருமாறு அறிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
இதேவேளைஇ 5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1652 ரூபாவுக்கும்
2.3 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 23 ரூபாவினால் குறைக்கப்பட்டு 772 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை பின்வருமாறு
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை-4435.79 /-
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை -1842.94/-
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை – 951 /-
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை மற்றுமொரு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று(01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படிஇதற்கமைய 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4இ115 ரூபாவாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய மேலும் ஐந்து கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தை எரிவாயு விலை மற்றும் ரூபாயின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச விலைச் சலுகைகளை வழங்க தமது நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகவும் மாவட்டங்களுக்கு ஏற்ப விலை மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர் சேவை எண் 1345 ஐ அழைத்து பொதுமக்கள் தெளிவினை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் கல்முனை , மருதமுனை , நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது , காரைதீவு, பாண்டிருப்பு , பெரியநீலாவணை , சம்மாந்துறை , அக்கரைப்பற்று ,உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்ற எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை தான்தொன்றித் தனமாக வர்த்தகர்கள் நிர்ணயித்து அதிகளவான விலையில் விற்பனை செய்வதாகவும் எனவே நுகர்வோர் அதிகார சபை இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.