தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச்)  திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு  (01) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் இஸ்லாமிய நலன்புரிச் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சமய நல்லிணக்க விடயங்களை புரிந்து கொள்ளும் ஒரு சகவாழ்வு, சகோதர தத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இது எதிர்பார்க்கப்படுகிறது.
நோன்பின் மகத்துவம் பற்றி ஜம்மியத்துல் உலமா சபையின் தம்பலகாமம் பிரதேச தலைவர் மௌலவி குசைன் பயான் நிகழ்த்தினார். இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சர்வமதத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.