தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 45 ஆண்டு பூர்த்தி.

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 01.04.2024 ஆம் திகதியுடன் 45 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வதையிட்டு அதன் வருடாந்த விழாவினை இன்று பெருமையுடன்  தலைமைக் காரியாலயத்திலும் மாவட்டக் காரியலயங்களிலும் கொண்டாடியது.
 
இந் நிகழ்வு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்  ரஜிவ் சூரியாராச்சி தலைமையில் அதிகார சபையின்  தலைமைக் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் அதிகார சபை 1979ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் அதிகார சபை  நாடு பூராகவும் வீடுகள் அற்ற மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல் வீடமைப்புக் கடன் வழங்குதல் நகர, கிராமிய, பிரதேசங்களில் கடந்த காலத்தில்  பல்வேறு  வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களையும்  அமுல்படுத்தி வந்ததுள்ளது..  இதுவரை 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ் அதிகார சபையின் ஊடாக நன்மையடைந்துள்ளன.  .
 
கடந்த காலங்களில்  1இலட்சம் வீடமைப்புத் திட்டம், 10 இலட்சம் வீடமைப்புத் திட்டம், மாதிரிக் கிராமங்கள், செவன வீடமைப்பு,தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள்,   நமக்கு ஒர் வீடு  நாட்டுக்கு ஓர் வீடு போன்ற பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. 
 
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடி காலத்தில்   இந் நிறுவனம் பல்வேறு  பிரச்சினைகளுக்கு  முகம்கொடுத்துள்ளது.   இந் நிறுவனத்தினை கடந்த 45 வருட காலமாக கட்டிக் காத்து திறம்பட கொண்டு செல்லும் ஊழியர்கள் மற்றும் முகாமைத்துவ சபைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் நனறியறிதலைத் தெரிவித்தார்  அத்துடன் நாடளாரீதியில் வீடமைப்புக் கடன் திட்டத்திங்களை  வழங்கி  வீடமைப்புத் அபிவிருத்தித்  திட்டங்களையும் மாவட்டம்தோறும் முன்னெடுத்துச் செல்வதாகவும் அர்ப்பணிப்புடம் தொன்டாட்ருவதாக  தெரிவித்தார்
.
இவ் வைபவத்தில் உப தலைவர் லக்ஷ்மன் குணவர்த்தன, பணிப்பாளர் சபை உறுப்பிணர்கள், பொது முகாமையாளர் கே.ஏ ஜனாக்க மற்றும் தலைமைக் காரியாலயத்தின் சகல  ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் .45 வருடத்தினை முன்னிட்டு கேக் வெட்டி ஊழியர்கள் பறிமாரிக்கொண்டனர்.