( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2024 ஆம் ஆண்டிற்குரிய கலைஞர் ஒன்றுகூடலும் கலாச்சார பேரவை புதிய நிர்வாகத் தெரிவும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் செவ்வாய் கிழமை (26) மாலை மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல தரப்பினரும் கொண்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மன்னார் பிரதேச செயலக கலாச்சார பேரவையின் நிர்வாக உறுப்பினர்களாக
தலைவர் பிரதேச செயலாளர்
செயலாளர் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்.
உப தலைவர் அருட்பணி டக்ளஸ் லோகு அடிகளார் ,
உப செயலாளர் எஸ்.ஏ.உதயன்
பொருளாளர் தர்மகுமாரக் குருக்கள்
உறுப்பினர்கள் எஸ்.மைக்கல் கொலின் , திருமதி எல்.எஸ்.கியூ ராஜ்குமார் , ஆருமுகநாதன் முரளி ,
மன்னார் அமுதன் . ஏ.டெலிஸ்ரன் , எஸ்.ஆனந்த லியோன் , எஸ்.ஏ.ராதா பெர்னாண்டோ , ஏ.அமல்ராஜ் , ஏ.அஜந்த ரூபன் . அ.மரியநாயகம் அல்மேடா . எஸ்.எடின்பரோ , எஸ்.சதீஸ்வரன் . திருமதி எஸ்.டெனிஸ்ரின் மற்றும் சேவியர் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.