கிடைக்கும் உதவிகளை கை நழுவ விடாதீர்கள் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன்

( வாஸ் கூஞ்ஞ)

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்ந்த ரக மிளாய் விதைகளை இங்குள்ள விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் வாழ்வதாரத்தை மேலும் உயர்ச்சிபெற வாய்ப்புக்கள் உண்டு என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீள்குடியேறி வாழும் மூன்று கிராமங்களான பிச்சைவாணிப நெடுங்குளம் அலக்கட்டு . வேப்பங்குளம் அலக்கட்டு . அகத்தி முறிப்பு அலக்கட்டு  மற்றும் பொற்கேணி அலக்கட்டு ஆகிய நான்கு கிராமபுறங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 250 மிளகாய் செய்கை உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உயர்தர வர்க்கம் கொண்ட மிளகாய் விதைகள்  ஞாயிற்றுக்கிழமை (31) அன்று  வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மீள்குடியேறி வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் உங்களுக்கு எவ்வாறு உதவி புரியலாம் என நீண்ட காலமாக எண்ணிக் கொண்டு இருந்தேன்.

இருந்தும் இறைவன் அருளால் ஒருவர் தனது சொந்த பணத்தில் தனது நிறுவனத்தின் மூலம் உதவி செய்ய வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இங்கு உதவி செய்ய வந்திருக்கும் கணேஷ் அவர்கள் நாற்பது வருடங்களாக விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இவரின் தந்தை விவசாயத் துறையில் மிகவும் பரீட்சியமானவர். பல பட்டங்களைப் பெற்றவர். இப்படிப்பட்டவருடன் இக்கிராம மக்களுக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டு இருப்பது எதிர்காலத்துக்கு ஒரு சுபீட்சமாகும்.

விவசாயிகளாகிய நீங்கள் அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய விதத்தில் இந்த மிளகாய் பயிர் செய்கைக்கு உங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

இந்த கிராம பகுதிக்குள் மீள்குடியேற வருகை தந்தபொழுது இதற்குள் வாழ முடியுமா என கேள்வி கேட்டவர்களும் உண்டு.

இருந்தும் இதற்குள் வந்து முயற்சி செய்து தங்கள் வாழ்வாதாரத்துக்காக உழைத்து முன்னேற்றம் காண்பரும் உண்டு.

இங்கு வழங்கப்படும் விதைகள் உயர்ந்த பயண்பாட்டைத் தரக்கூடிய விதைகளாகும். ஆகவே இதைத் கொண்டு நீங்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றது.

பச்சை மிளகாயை காய்ந்த மிளகாயாக ஆக்க பதம் தெரியாது இருக்கின்றோம் என இங்கு தெரிவித்தீர்கள். ஆனால் இந்த விதையானது காய்ந்த மிளகாய் பதத்துக்கு வரும் நிலை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உங்களுக்கு கொடுக்கப்பட்ட விதைகளை நீங்கள் சரியான முறையில் பயண்படுத்தி செயல்படுவீர்கள் என்றால் இவர்களால் உங்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்க வாய்ப்புக்கள் இருக்கின்றது என இவ்வாறு தெரிவித்தார்.