தந்தை செல்வாவின் 126 வது பிறந்த நாள் மன்னாரில்.

வாஸ் கூஞ்ஞ) 

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 126 வது பிறந்த நாள் நினைவேந்தல் மன்னாரில் இடம்பெற்றது.

ஞாயிற்றுக் கிழமை (31) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வானது தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் செயலாளர் திரு யஸ்ரின் துரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தந்தை செல்வாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் நகரில் மத்திய பகுதியில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் , மன்னார் நகர சபை முன்னாள் உப தவிசாளர் மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.