(எருவில் துசி) மன்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவு பேராளர் மாநாடு குறித்த சங்கத்தின் கட்டத்தில் 31.03.2024ந் திகதி நடைபெற்றது.
இதன் போது சங்கத்திற்குரிய பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான தெரிவானது தேர்தல் மூலம் நடைபெற்றது அதில் கீழ் குறிப்பிடப்படும் 7 நபர்கள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக தொரிவு செய்யப்பட்டனர். பணிப்பாளர் சபையின் தலைவராக மே.வினோராஜ் அவர்களை சங்கத்தின் அதிகப்படியான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் உபதலைவர் ம.சதானேசன் அவர்களும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மா.திருநாவுக்கரசு ப.குணசேகரன் அ.றுத்றா ச.தனுசியா சு.துருபதன் ஆகியோர்களும் தெரிவு செய்யப்படடனர்.