நானுஓயா கெல்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது

செ.திவாகரன் ,டி.சந்ரு

நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழி தோன்றி புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் நானுஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேதநபர் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் ஐந்து திருட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
இவ்விடயம் தொடர்பாக நானுஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க (75261) , சமரகோன் (40932) மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இவ் திருட்டு பொருட்களை வெள்ளிக்கிழமை (29) மீட்கப்பட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
இவ் சம்பவத்தில் நானுஓயா கெல்சி தோட்டத்தை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் நானுஓயா பிரதான நகர் , டெஸ்போட் தோட்டம் , கெல்சி தோட்டம் மற்றும் பெரக்கும்பர பகுதியில் விவசாயிகளின் தோட்டங்களிலும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரென தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து விலையுயர்ந்த தொலைக்காட்சி, நீர்ப்பம்பி, சமையல் எரிவாயு சிலிண்டர் ,  பெறுமதியான மணிக்கூடு ,சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் , குளியலறை உபகரணங்கள் , துவிச்சக்கர வண்டி , இரும்பு கம்பிகள் ,  போன்றன மீட்க்கப்பட்டுள்ளன.
கைது  செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் சனிக்கிழமை (30)  நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்திய போது சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவானால்  உத்தரவிடப்பட்டுள்ளது.