சம்பிரதாய அரசியலுக்கு இளைஞர்கள் இனிமேலும் இடமளிக்க மாட்டனர்.

இளைஞர் பாராளுமன்றங்களும் இளைஞர்களுக்கான தேசிய வேலைத்திட்டங்களும் அரச குடும்பங்களின் இளவரசர்களின் பிடியில்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அதிகாரத்தை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தை இளைஞர்கள் விரும்புவதில்லை. இளைஞர்கள் மற்றும் குடிமக்களுக்கு தாங்கள் விசுவாசிக்கும் மதத்தை கடைப்பிடிக்கும் உரிமை இருக்க வேண்டும். விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள்,பள்ளிவாசல்களில் வழிபாடுகளை தடை செய்யும், மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாற்று ஆட்சியை கொண்டு வருவதா அல்லது சுதந்திரமான சுதந்திர நாட்டை உருவாக்குவதா என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொலை, கொள்ளை, மிரட்டல், துன்புறுத்தல்கள் மூலம் அதிகாரத்தைப் பெற அடக்குமுறைக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்ட காலகட்டம் இருந்தது. இவ்வாறான கலாசாரத்தை இனியும் அனுமதிக்க வேண்டுமா என்பதை இளைஞர்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சோசலிசத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் காட்போர்ட் சோசலிஸவாதிகள் இலவச சுகாதாரம், இலவசக் கல்வி என்று குரல் எழுப்பினாலும், தங்கள் பிள்ளைகளை தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் தமது தேவைகளை நிறைவேற்றி மக்களை ஏமாற்றிவருகின்றனர். தாம் எல்லாவற்றையும் இலவசமாக

‘பகிர்ந்தளிப்பதாக’ விமர்சிக்கின்றனர்.

அவர்களைப் போல் ஒருவரிடமிருந்து ஆடைகளை பெற்றுத் தன் சுய தேவைக்காக பாடுபடவில்லை.ஏற்றத்தாழ்வுகளை முடிந்தளவு இல்லாமலாக்கவே முயற்சித்து வருகிறேன்.கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்க முடியாது. எனவே, பிறரிடம் இருந்து பெற்று சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதை  விட, மக்களுக்காக எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை தன்னிடமிருந்து கற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாத்தறை, மஹிந்த விஜேசேகர விளையாட்டரங்கில் இன்று(30) நடைபெற்ற ஐக்கிய வரிசைப்படுத்தல் படையின் இளைஞர் மாநாட்டை ஆரம்பித்து வைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

🟩இனிமேலும் ஒரு அரசியல் கட்சிக்கு துணைபோகும் கலாசாரத்திற்கு செல்ல வேண்டாம்.

தேர்தல் வருடமொன்றில் இளைஞர்களும், பொதுமக்களும் அரசியல் பலிகாடாகி வருகின்றனர். சம்பிரதாய அரசியல் போக்கில் பல சமயங்களில் நாட்டின் இளைஞர்கள் வழக்கமான அரசியலுக்குள் வழி தவறியிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் கோரிய முறைமை மாற்றத்தை கடந்த 3 வருடங்களாக வார்த்தைகளால் அன்றி செயலால் நிரூபித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொள்கையைத் தலைகீழாக மாற்றி, நாட்டின் ஆணையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் மூச்சு,பிரபஞ்சம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி மக்களுக்கும் நாட்டுக்கும் பயன் சேர்த்த ஒரே எதிர்க்கட்சியினர் நாமே என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩சம்பிரதாய அரசியலுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல.

பெரும்பான்மையான இளைஞர்கள் அரசியல்வாதிகளை நம்புவதில்லை. நாட்டின் இளைஞர்கள் வழமையான முறையை ஏற்றுக் கொள்ளவதில்லை. சம்பிரதாய அரசியலின் முறைமையின் வழமையான அடிமைகளாக ஐக்கிய மக்கள் சக்தியினர் இல்லை. சம்பிரதாயத்தை மாற்றி புதிய முற்போக்கு பநணத்தை முன்னெடுக்கும் அரசியல் சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தி தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

🟩 இளைஞர்களின் உரிமைகள் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்குள்.

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் இளைஞர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாததால், பொருளாதார, சமூக, அரசியல், கலாசார, மத உரிமைகளில் இளைஞர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 ஆங்கிலம் பேசத் தெரியாத அமைச்சர்கள் இருக்கும் நாட்டில் கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள்!

அரசாங்க செய்தியாளர் சந்திப்பில், ஒரு இளம் ஊடகவியலாளர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வியை, பொறுப்பான அமைச்சர் ஒருவர் செவிமெடுக்காத வகையில் தெரியாதது போல் நடந்து கொண்டமை இந்நாட்டின் கல்வியின் பின்னடைவையே சுட்டிக்காட்டுகிறது.

செல்வந்தர்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்று சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டாலும்,

பெரும்பான்மையான மக்களுக்கு இவ்வாறான முன்னேற்றம் பொதுக் கட்டமைப்பில் இருந்து ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

10 இலட்சம் புதிய இளம் தொழில் முனைவோர்களை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும். ஆட்சியில் இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்க புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும். இளைஞர் பாராளுமன்றங்களும் இளைஞர்களுக்கான தேசிய வேலைத்திட்டங்களும் அரச குடும்பங்களின் இளவரசர்களால் கைப்பற்றப்பட்டாலும், அரசியல் ரீதியில் தலையீடுகளிலிருந்து விடுவித்து ஜனநாயகக் கட்டமைப்பில் இளைஞர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.