வருடங்களுக்குப் பின் பேசாலையில் ‘குற்றம் கழுவிய குருதி’

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை பங்கு சமூகத்தினால் சுமார் இருநூறு வருடங்களாக கத்தோலிக்க மக்களின் தவக்காலங்களில் குறிப்பாக பரிசுத்த வாரத்தில் காண்பிக்கப்படும் உடக்குப் பாஸ் நீண்ட இடைவெளிக்குப்பின் இம்முறை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பாஸ் மண்டபத்தில்  காண்பிக்கப்பட்டது.

புனித வெள்ளியன்று (29) கிறிஸ்துவின் பாடுகள் தொடர்பான திருச் சடங்குகள் பங்குத் தந்தை அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவ்வருடம் (2024) பேசாலையில் காண்பிக்கப்பட்டது.’குற்றம் கழுவிய குருதி’ கல்வாரிக் காவியம் கொண்ட உடக்காலான திருபாடுகளின் ஆற்றுகையானது இரவு ஏழு மணித் தொடக்கம் சுமார் ஐந்து மணித்தியாலத்துக்கு மேல் நடைபெற்றது.

பல வருடங்களுக்கு முன் நாட்டில் பல இடங்களில் இவ்வாறான உடக்கு பாஸ் காண்பிக்கப்பட்டு வந்தபோதும் தற்பொழுது இவைகள் அருகிச் சென்ற நிலையில் பேசாலையில் மட்டுமே தற்பொழுது; காண்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆற்றுகையை மேடையேற்றுவது என்றால் இன்றைய பொருளாதார சிக்கலில் பெரும் தொகை பணம் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கின்றபோதும் இந்த கலை பேசாலையில் தொடர்ந்து எதிர்கால சந்ததினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டு இது வருடங்கள் பல கடந்தாலும் பங்கு மக்களின் நிதி பங்களிப்புடன் இவை காண்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கலை என்று மட்டும் கத்தோலிக்க மக்கள் நினையாது இறைமகன் இயேசுவின் திருப்பாடுகளை உணர்வு பூர்வமாக ஆன்மீக ரீதியில் சிந்திக்கும் ஒரு நிகழ்வாகவே சிந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் மதங்களைக் கடந்து பார்வையிட்டதும் குறி;பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

20240329_195246.jpg20240329_202026.jpg20240329_202636.jpg20240329_194833.jpg20240329_200126.jpg20240329_204018.jpg20240329_203553.jpg20240329_204233.jpg20240329_221623.jpg20240329_221630.jpg20240329_225805.jpg20240329_225738.jpg