மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  இப்தார் நிகழ்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் வரலாற்றில் முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட  முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் பொழுதிற்கான இப்தார் நிகழ்வுகள் பணிமனையின் வளாகத்தில்  நேற்று (27) இடம்பெற்றது.
பசியையும் தாகத்தையும் உணர்பவனே ஏழைகளுக்கு மனமார உதவுவான். நல்லிணக்கம் நாவினால் மட்டும் வந்துவிடாது அது உணர்வோடு ஒன்றிணைந்து செயலோடு வெளிப்படவேண்டும்.
இன, மத, பிரதேச வேறுபாடு களைந்து மனிதநேயம் மலர என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.இந்நிகழ்வில் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் குடும்ப சகிதம் பங்கேற்றத்துடன்,  மட்டக்களப்பு நகர் இஸ்லாமிய வர்த்தக பிரமுகர்கள், பிராந்திய மக்கள் மற்றும் நலன்  விரும்பிகள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

இவ்இப்தார் வைபவம் பிராந்திய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவு , மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.