மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் மகளீர்தின கொண்டாட்டம் – 2024

மேற்படி நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு. S .சுதாகர் அவர்களின்
ஆலோசனை ,வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அவர்களின் நெறிபடுத்தில் சிறப்பான முறையில் இடம் பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பட்டிபளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட நான்கு திணைக்கள மகளீர் உத்தியோகஸ்தர்கள் பங்குபற்றிய எல்லே விளையாட்டு நிகழ்வு அரசடித்தீவு விக்னேஸ்வர விளையாட்டு மைதானத்தில்
இன்று ( 2024.03.27 ) சிறப்பான முறையில் நடைபெற்றது.

அத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியும் இடம்பெற்றதுடன் இந்த நிகழ்வில் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை வைத்தியர் , சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் , உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விளையாட்டு நிகழ்வில் இறுதிப்போட்டியில் பட்டிபளை பிரதேச செயலக மகளீர் அணி முதலாவது இடத்தினையும் , பிரதேச சபை மகளீர் அணி இரண்டாவது இடத்தினையும் பெற்று கொண்டது.