ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் இன்று காரைதீவில்  குடும்ப சுகாதார நிலையம் திறப்பு விழா.

( வி.ரி.சகாதேவராஜா)   இலங்கை  இராமகிருஷ்ண மிஷன் காரைதீவு சாரதா நலன்புரி நிலையத்தில் இன்று( 28)  வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு குடும்ப சுகாதார நிலையம்(dispensary) திறந்து வைக்கப்படவுள்ளது.
 இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக  இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பிக்கின்றார்.
இந்த நிலையமானது பொதுமக்களுக்காக முற்றிலும் இலவசமாக நடத்தப்பட இருக்கின்றது.
வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரையான காலப்பகுதியில் இங்கு இலவசமாக சுகாதார சேவை இடம் பெற இருக்கிறது .
கல்முனை ஆதாரவைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரனின் ஒத்துழைப்புடன் காரைதீவு வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவையாளர்கள் தொண்டரடிப்படையில் பணியாற்ற முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று  (27) புதன்கிழமை மாலை உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் துணை பொதுச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போ சாரானந்தைக்கு மகராஜ் நேற்று  மாலை காரைதீவு க்கு விஜயம் செய்தார் .
சாரதா சிறுமியர் இல்லத்தை பார்வையிட்டதோடு அங்கு புதிதாக திறந்து வைக்கப்பட இருக்கிற குடும்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.