பொத்துவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாமிடம்.

(அபு அலா )  இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 2559300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது.
இதனை பாராட்டி கெளரவித்து நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பொத்துவில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி பிர்னாஸ் இஸ்மாயில் அவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி கெளரவித்தார்.
கடந்த வருடம் (2023) நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதியத்திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 648 இலக்கையும், 4152 பேரை இணைத்து 2559300/- சேமிப்பு பணத்தை வைப்புச் செய்து 640.74 சதவீதம் அடிப்படையில் செயற்பட்டு தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.