தேர்தல் முறைமை தொடர்பாக கொண்டுவரும்  சட்ட மூலம்  நடக்க இருக்கும் தேர்தல்களை பிற்போடுவதற்கான ஆயத்தமாகும்- நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்.

(கனகராசா சரவணன்)  தேர்தல்களை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வல்லமையுள்ளவர் எனவே இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்ற சட்ட மூலம் நடக்க இருக்கும் தேர்தல்களை பிற்போடுவதற்கான ஆயத்தமாக இருக்கலாம் என நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வாவிக்கரையில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் இன்று செவ்;வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்ரர்   குண்டிவெடிப்பு  தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிஜடி யினரால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளார் 2019 அவர்; ஜனாதிபதியாக இருந்த காலகட்டம் அந்த குண்டுவெடிப்பை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக கோட்டபாயாவை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்காக அவரின் கீழ் இயங்கிய புலனாய்வு பிரிவினரால் திட்டமிட்டு செய்யப்பட்ட குண்டுவெடிப்பாக பேசப்பட்டது

சனல் 4 ஊடகம் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் கடந்த வருடம் ஈஸ்ரர் குண்டுவெஎடிப்பு தொடர்பாக அம்பலமாக்கி பிரபலமானது தற்போது  ஈஸ்ரர் படுகொலை சம்மந்தமாக தமிழ் மக்களின் விடுதலைப் புலிகளின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) புத்தம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் பல விடையங்களை குறிப்பிட்டிருக்கின்றார் அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார் அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் தனக்கு தெரிந்த விடையங்களை வெளிப்படையக கூறி மனித உயிர்களை பலியெடுத்து அந்த சூத்திரதாரிகளை சட்டத்துக்கு முன் கொண்டுவருவதற்கு துனை போகவேண்டும்

அதனூடாக இந்த ஈஸ்ரர் படுகொலை யாருக்காக அது நடாத்தப்பட்டது அல்லது எதற்காக நடாத்தப்பட்டது என்ற உண்மை வெளிவரவேண்டும். மைதிரிபால எதை கூறியுள்ளார் என இன்னும் வெளிவரவில்லை ஆனால் அவரின் கூற்றுக்கள் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக கூறப்படவேண்டும்

அதேபோன்று இந்தவருடம் தேர்தல் ஆண்டாக இருக்கின்றது அது ஜனாதிபதி தேர்தலா நாடாளுமன்ற தேர்தலா முதல் வரவேண்டும் என சந்தேகம் இருக்கின்றது  அதேவேளை சரி பிழைக்கு அப்பால் இலங்கை அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 10 மாதத்திற்கு  முன்பு நடந்தே ஆகவேண்டும் ஆனால் தற்போது இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்திருக்கின்றது

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸா நாடாளும்ன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்ற சட்ட மூலம்  நடக்க இருக்கும் தேர்தல்களை பிற்போடுவதற்காக ஆயத்தமாக இருக்கலாம் ஏன் என்றால் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாமல் கடந்த 7  வருடங்களாக இருக்கின்றது.

அவ்வாறே மாகாணசபை தேர்தல் நடாத்துவதற்கான காலம் வரும்பேர்து அந்த மாகாணசபை தேர்தல் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்து இன்றுவரை அந்த தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளது எனவே இந்த தேர்தல்களை ஒத்தி போடுவதிலே வல்லமையுள்ளவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

எதிர்வரும் தேர்தல்களை பிற்போடுவதற்கான ஆயத்தமாக இந்த தேர்தல் முறை மாற்றம் சட்டமூலத்தை கொண்டுவருகின்றாரே என்ற  சந்தேகம் இருக்கின்றது எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆக வேண்டும் அதேவேளை தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்காக எடுக்கும் முடிவில் நாங்களும் ஒற்றுமையாக செயற்பட்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.