மட்டக்களப்பில் ஒரு காசி ஆனந்தன் மன்னாரில் ஒரு ஆனந்தன்

(வாஸ் கூஞ்ஞ)
35 வருடங்களாக இலை மறை காயாக திகழ்து வரும் கவிஞர் கலா விபூசணம் ஆசிரியர் சி.ஜோ.ஆனந்தநாயகம் லியோன் அண்மையில் இலங்கை இந்திய நற்புறவு அமைப்பினால் கண்டியில் ‘சிறீ விக்கிரம கீர்த்தி’ விருது வழங்கி கௌவிக்கப்பட்டார்.

கவிஞர் ஆனந்த லியோன் அவர்கள் ஒரு சிறந்த கல்விமான். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு மனப்பாங்குக் கொண்டவர்.

இலைமறை காயாக இருந்து 35 வருடங்களாக தனது கலை பயணத்தை முன்னெடுத்து வருபவர்.

இவரின் 35 வருட காலத்தில் இவரின் கலைப் பயணத்தை நோக்கும்போது

(எழுதிய இலக்கிய நாடகங்கள்)
‘முயற்சியுடையார்’ (குறியீட்டு நாடகம்)
‘பாவக்கடை’ (குறியீட்டு நாடகம்)
:பாவச்சங்கிலி’ (குறியீட்டு நாடகம்)
‘சூழ்ச்சி’ (சிறுவர் இசை நாடகம்)
‘இறைவனைத் தேடி’ (சமூக நாடகம்)
‘தீர்வாளன்’ (சமூக நாடகம்)
‘சூத்திரன்’ (சமூக நாடகம்)
‘நல்லவன் யார்’ (சமூக நாடகம்)
‘உன்னாலே உன்னாலே’ (சமூக நாடகம்)
‘இனிக்கும் 50’ (நாட்டுக்கூத்து)

(இவர் நடித்த நாடகங்கள்)
தேசியக்கலைஞன் சாஹித்தியா எஸ்.ஏ.உதயன் அவர்களின் படைப்பில் உருவான நாடகங்களில் நடித்தது.
யாழ்ப்பாணம் திருமறைக்கலா மன்றத்தின் செயலாளர் ஜோண்சன் ராஜ்குமார் அவர்களின் இயக்கத்தில் நடித்தது.
கலைஞன் எஸ்.றோமன் குரூஸ் அவர்களின் இயக்கத்தில் திருவிளையாடல்  , நடுவூர் நச்சுமரம் , காலச்சக்கரம் போன்ற நாடகங்களில் நடிகராக மேடையேறியது.

(நடித்த நாட்டுக் கூத்துக்கள்)
தேசிய கலைஞன் ‘சாஹித்தியா’ எஸ்.ஏ.உதயன் அவர்களின் படைப்பில் உருவான ‘சங்கநாதம்’ (5 தடவைகளும்) ‘வாலிவதம்’ (2 தடவைகள் மேடையேற்றப்பட்டபோது) நடித்தது.

(வெள்ளித்திரை நடிப்பு)
இயக்குனர் பிரகாஸ் ராஜ் இயக்கத்தில் இலங்கையில் உருவாக்கப்பட்ட ‘விலங்கு தெறிக்கும்’ என்ற முழு நீளத்திரைப்படத்தில் நடித்தமை,

(குறும்பட நடிப்பு)
‘கஸ்ர கரணம்’ (இயக்குனர் தேசிய கலைஞன் எஸ்.ஏ.உதயன்)
‘அரக ;- கண்’  (இயக்குனர் சுரேன் முரளி)
‘மாயத்தோற்றம்’ (இயக்குனர் டிலக்சன்) போன்றவற்றில் நடித்தமை

(நூல் வெளியீடு)
‘எறும்பு விட்ட வினாத்தாள்’ என்னும் கவிதைத் தொகுப்பு,

(கவிதைப் போட்டி)
2002ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றமை,

(நாடகப் போட்டி)
2002ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் சிறந்த நாடக நெறியாள்கைக்காக முதலாம் இடம் கிடைத்தமை

(தனி நடிப்பு)
2002ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தனி நடிப்புப் போட்டியில் முதலாம் இடம் கிடைத்தமை

(புதிய நிர்மாணிப்பு நடனம்)
தேசிய ரீதியில் மகரகமவில் நடாத்தப்பட்ட சாஹித்யா தேசிய கலைஞன் எஸ்.ஏ.உதயன் அவர்களின் நெறியாள்கையில் உருவானதில் இவர் ஆடிய நடனத்துக்கு முதலாம் இடம் கிடைத்தமை,

(விமர்சனம் எழுதுதல்)
மன்.பத்திமா தேசிய பாடசாலையினால் நடாத்தப்பட்ட (1992) ‘வானமே எல்லை’ என்ற திரைப்படத்தில் விமர்சனம் எழுதி முதலாம் இடத்தைப் பெற்றது.

இவர் தொடர்ந்தும் கவிதைகள் , சிறுகதைகள் மற்றும் ‘சிங்காபுரி விஜயன் நாட்டுக்கூத்து போன்றவற்றில் தன்னை ஈடுபத்தி வருவதையும் நோக்கக் கூடியதாக இருக்கின்றபோதும்.

அண்மையில் கலாவிபூசணம் மற்றும் புலவர் செபஸ்ரியான் குரூஸ் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட ‘வாழும்போதே வாழ்த்துவோம் என்ற விருதுகளை பெற்ற வரிசையில் இம்மாதம் (பங்குனி 2024) இலங்கை இந்திய நற்புறவு ஒன்றியத்தினால் கண்டியில் வழங்கப்பட்ட ‘சிறீ விக்கிரம கீர்த்தி’ என்ற விருதையும் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாக இருக்கின்றது.

மன்னாரில் இவ்வாறான கலைஞர்களை கொண்டு இம்மாவட்டத்தில் தொடர்ந்து கலைகளை வளர்க்க வேண்டும் என்பதே இன்றைய காலத்தில்  சாலச் சிறந்தது என பலரின் அவாவாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமன்றி அவரின் கவிதை படைப்பபையும் அதை சபையில் வாசித்த திறமையையும் உணர்ந்த கிழக்கு மாகாண அரசியல் வாதிகள் மன்னாரில் தங்களுக்கு போர்த்திய பொன்னாடையை இவருக்கு போர்த்தி மட்டக்களப்பில் ஒரு காசி ஆனந்தன் மன்னாரில் ஒரு ஆனந்தன் என பகழாரம் சூட்டிய நிகழ்வும் அன்மையில் மன்னாரில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.