தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கருத்தொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் தனக்கு உண்மை தெரியும் என தெரிவித்துள்ளார். இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிய தான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில், இனியும் காத்திருக்காமல் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும்,இதன் உண்மைகளை உடனடியாக வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் உண்மையை வெளிப்படுத்தும், தேசிய சர்வதேச பங்குதாரர்களை ஈடுபடுத்திக் கொண்ட விசாரணை ஊடாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம். இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் எந்த பதவி நிலைகளில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கூடிய தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 131 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ஹம்பந்தோட்டை, லுனுகம்வெஹர அபயபுர கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
பகிர்ந்து வருவதால் என் மீது பழி சுமத்துபவர்கள் அணியும் ஆடைகளும் மற்றவர்களால் கொடுக்கப்பட்டவையே!
பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்,ஸ்மார்ட் திரைகள், அகராதிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொதிகள்,காசல் வீதி மருத்துவமனையிலுள்ள தாய்மார்களுக்குத் தேவையான உபகரணங்கள் என வழங்கப்பட்டு வரும் போது என் மீது எல்லா இடங்களிலும் இருந்தும் சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் அணியும் ஆடைகளை அவர்கள் சொந்த செலவில் வாங்குவதில்லை. அவை அனைத்தும் நண்பர்கள் கொடுத்தவை என்று சொல்கிறார்கள். சேர்ட், பெல்ட், ஷூ போன்றவற்றை பிறரிடம் இருந்து கொள்வனவு செய்வது அவர்களுக்கு நல்லது என்ற நிலையில், சஜித் பிரேமதாச அவற்றை பகிர்ந்தளிப்பது அவர்களின் பார்வையில் பொருத்தமற்ற செயல் போல் தெரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அந்த மாற்றுத் தலைவர்களைப் போல் நான் பிறரிடம் கால்சட்டை கேட்க மாட்டேன். மக்கள் நலனுக்காகத் என் கைவசம் இருப்பதைக் கொடுப்பேன். மாற்றுத் தலைவர்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களைப் பெற்றுக்கொண்டு சுகபோக, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சஜித் பிரேமதாச பொது நலன் கருதி பகிர்ந்தளிப்பது அவர்களின் பார்வையில் பிழையாக தெரிகிறது.இது அரசியல் பொறாமைத்தனம் என அவர் தெரிவித்தார்.
பிறர் வழங்குவதை அணிய முடியுமானவர்களுக்கு அது சரி. சஜித் பிறருக்கு பகிர்ந்தளிப்பது பிழை. சமூக பாதுகாப்பு நலன் திட்டங்கள் குறித்த போதிய புரிதல் அற்றவர்களே இவ்வாறான பார்வையில் தம்மை விமர்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.