மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி வலயத்தில் குருளைச் சாரணர் கலைக் சின்னம் சூட்டும் நிகழ்வு

சதீஸ்

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி வலயத்தில் குருளைச் சாரணர் பயிற்சியை நிறைவு செய்தார் ஆசிரியர்களுக்கு கலைக் கூறு 1 ( ஒன்று) சின்னம் சூட்டும் நிகழ்வு குறிஞ்சா முனை பாடசாலை மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.

ஆசிரிய ஆலோசகர்
ஜெயகரன் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், பிரதிக்கல்விப் பணிப்பாளர் சஜிவன், நிருவாக உத்தியோகத்தர் தர்சினி, கொழும்பு தேசிய சாரணர் தலைமை காரியாலயத்தின் பயிற்றுனர் கே.பாரதி, பயிற்றுனர் உயகுமார், மாவட்ட குருளை சாரணர் தலைவர் பிரதீபன், சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் என். ஜனார்த்தனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவான
54 ஆசிரிய குருளைச் சாரணர்களுக்கு இதன் போது சின்னஞ் சூட்டி கழுத்துப் பட்டியும் அணிவிக்கப்பட்டது.