சகல முஸ்லிம் பாடசாலைகளது அதிபர்களுக்கும்

(அஷ்ரப் ஏ சமத்)

சகல முஸ்லிம் பாடசாலைகளது அதிபர்களுக்கும் கல்வியமைச்சினால்  பாடசாலை விடுமுறை காலத்தை  வினைதிறன் மிக்கதாக களிப்பதற்குரிய  வழிகாட்டல் பற்றிய சுற்றுநிருபம் கல்வியமைச்சின கல்விப் பணிப்பாளர்  மேஜர் என்ரீ.நஜிமுதீன் அவர்களினால் அனுப்பப்பட்டுள்ளது.

அச் சுற்றறிக்கையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2024ஆம் கல்வி ஆண்டின்  முதலாம் தவனையில் முதற்கட்டமாக விடுமுறை  06.03.2024 தொடக்கம் 16.04.2024 வரை  வழங்கப்படும். அதேவேளை முஸ்லிம்கள் 12.03.2024 தொடக்கம் 11.04.2024 வரைபுனித நோன்பினை  அனுஷ்டிக்கின்றனர்.
அதன் பிரகாரம் இந்நோபினை அனுஷ்டித்து உரிய சமய கிரியைகளில் ்ஈடுபடுவதற்காக  கல்வியமைச்சு  முஸ்லிம் பாடசாலைகளுக்கு  விடுமுறைவழங்கியுளளது.  விடுமுறை காலத்தில் பாடசாலை சூழலை டெங்கு  நுளம்புகள் பரவாதவாறு  சுத்தமாக வைத்திருத்தல்,  தற்பொது நிலவும்  வரட்சி காரணமாக  பாடசாலை வளாகத்தினுள்  உள்ள மரஞ்செடிகள் இறந்துவிடாது  நீரை  ஊற்றிப் பாதுகாத்தல்  மற்றும் பாடசாலையின சகல உடமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் அவசியமாகும்
மேலும் ரமழான் நேன்பு  காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் ஆன்மீக செயற்பாட்டினை ஊக்குவிக்கு முகமாக  பாடசாலையில் காணப்படும்  வசதி வாய்ப்புக்களுக்கு  ஏற்றவாறு நோன்பு  திறக்கும் இப்தார்  நிகழ்வுவொன்றினை  ஏற்பாடு  செய்து நோன்பின் “ மாண்புகள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவிளை  நிகழ்ததச் செய்யுமாறும எமது  தாய்நாட்டின் நலனுக்காகவும் சமாதானத்திற்காகவும் வாழ்வதற்காக பிரத்தனை செய்யுமாறு வேண்டிய டுவதாக  கல்விப் பணிப்பாளர் மேஜர்  நசுமுதீன் வேண்டியுள்ளார்