பாகிஸ்தானின் தேசிய தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டது

(அஷ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு 23 மார்ச் 2024  கொழும்பில் உள்ளபாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்- அஸீஸ் அவர்கள்பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது பாகிஸ்தான் தேசிய கொடியை உயர்த்திவிழாவை ஆரம்பித்தார். இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின்பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கையில்,

 ஆகஸ்ட்  14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று பாகிஸ்தானின்தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு தமது தாய்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புஆகியவற்றில் மட்டுமல்லாமல், இரு நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மேலும்நெருக்கமாக கொண்டு வருவதிலும் பாகிஸ்தான் சமூகம் தங்கள் பங்கை திறம்பட ஆற்றுமாறும்குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்பையும்
உயர்ஸ்தானிகர் இதன் போது நினைவு கூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு நட்பு நாடுகளும்இருநாடுகளினதும் நலனுக்காக இந்த உறவினை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.