(எம்.எம்.றம்ஸீன்)
சர்வதேச வனங்கள் தினத்தினை முன்னிட்டு கோகிறீன் சூழலியல் நிறுவனம் இத்தினத்தினை காத்தான்குடியில் அனுஷ்டித்தது. இத்தினம் தொடர்பாக இம்முறை மூன்று செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டன. .
காத்தான்குடி ஜாமிஉல்-ழாபிரீன் மையவாடியில் மரநடுகை,
காத்தான்குடி மத்திய கல்லூரியின் வெளிப்புறச் சுற்றாடலில் மரநடுகை.,
. பூநொச்சிமுனை கடற்கரையோரங்களில் மரநடுகை ஆகிய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
கோகிறீன் நிறுவனத்தின் உபதலைவர் எம்.எல்.எம். லாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, காத்தான்குடி பிரதேசத்திற்குப் பொறுப்பான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரி திருமதி மலர்விழி பாஸ்கரன் , மட்டக்களப்பு வன பரிபாலன திணைக்கள அதிகாரி திரு சதாசிவம் , காத்தான்குடி பிரதேசத்திற்குப் பொறுப்பான கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரி திருமதி பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோகிறீன் நிறுவனத்தின் தலைவர் எம்.வை.எம்.ஷரீப் , செயலாளர் எம். மாஹிர் , மற்றும் எம்.றமீஸ் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.


